144 விலக்கப்பட்டது: ஜம்முவில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க உத்தரவு!

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு கருதி பல இடங்களில் 144 தடை உத்தரவும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

தற்போது அங்கு நிலைமை சீரடைந்து மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், நாளை முதல் ஜம்மு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவும் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, ஜம்மு காஷ்மீர் மாவட்ட துணை மாஜிஸ்திரேட் சுஷ்மா சவுகான் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதன்படி,  கடந்த 5ந்தேதி பிறப்பித்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஆகஸ்ட் 10ம் தேதி (நாளை) முதல் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,  இன்று முதல் (9ந்தேதி)  மண்டலம் மற்றும் மாநில அளவிலான அனைத்து அரசு ஊழியர் களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். ஊழியர்கள் பணிபுரிவதற்குத் தேவையான அமைதியான சூழல் உட்பட அனைத்து வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.