மலேசிய சிறைகளில் உள்ள இந்தியர்களை விடுக்க நடவடிக்கை: கனிமொழிக்கு சுஷ்மா கடிதம்

டில்லி :

லேசிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியார்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக திமுக எம்.பி. கனிமொழியின் கோரிக்கையை ஏற்று, அவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுஷ்மா சுவராஜ் கடிதம் மூலம் தெரிவித்து உள்ளார்.

மலேசிய சிறைகளில் உள்ள இந்தியர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 49 இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் அவதிப்படுவதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் திமுக எம்.பி.  கனிமொழிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்று பதில் கடிதம் எழுதி உள்ள சுஷ்மா,  நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் 49 இந்தியர் களை தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனவரியில் தொழிலாளர் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு நிலுவை ஊதியத்துடன்  மீட்கப்படுவவார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.