Random image

ஆன்லைன் விமர்சனத்துக்கு ஆளான சுஸ்மா சுவராஜ்

டில்லி:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தனது கணவர் இஸ்லாமியர் என்பதால் பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்படுவதாக தன்வி சேவத் என்ற அவரது மனைவி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜூக்கு டுவிட்டர் மூலம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அவரது கணவருக்கு பாஸ்போர்ட் கிடைக்க நடவடிக்கை எடுத்த சுஸ்மா, சம்மந்தப்பட்ட அலுவலக பாஸ்போர்ட் அதிகாரியை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதற்கு டுவிட்டரில் கண்டங்கள் எழுந்தது.

விகாஸ் மிஸ்ரா என்ற டுவிட்டர் பயனீட்டாளர் சுஸ்மாவின் கணவரும், முன்னாள் கவர்னருமான சுவராஜ் கவுசலையும் டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்,‘‘ இன்றிரவு உங்களது மனைவி வீட்டிற்கு வந்தவுடன் அவரை நீங்கள் ஏன் அடிக்க கூடாது?. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டாம். அவர்கள் பாஜக.வுக்கு ஓட்டு போட மாட்டார்கள்’’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு சுஸ்மாவின் கணவர் பதிலளித்திருந்தார். அதில்,‘‘உங்களது பதிவு தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சுஸ்மாவை நாங்கள் மதிக்கிறோம். அதனால் தயவு செய்து இப்படி பேச வேண்டாம். சுஸ்மாவின் நலன் எங்களுக்கு முக்கியம்’’ என்று பதிவிட்டிருந்தார்.

டில்லி ஐஐடி பட்டதாரியான விகாஸ் மிஸ்ராவில் டுவிட் பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது. பலர் அவர் மீது டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தனர். அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு தொடர்பாக சுஸ்மா ஒரு சர்வே நடத்தினார். அதில் 43 சதவீதம் பேர் இந்த பதிவை ஏற்றுக் கொண்டனர். நேற்று இரவு 10 மணி வேரை நடந்த இந்த சர்வேயில் 1.14 லட்சம் பேர் கருத்தை பதிவிட்டனர். 57 சதவீதம் பேர் இந்த பதிவை ஏற்றுக் கொள்ளாமல் சுஸ்மாவுக்கு ஆதரவு அளித்தனர்.

இதில் இடம்பெற்ற பல பதிவுகளில் அமைச்சருக்கு மிரட்டல், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஜாதி, மத பெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான படங்கள், மீமிஸ்களும் இடம்பெற்றிருந்தன. இதில் என்ன விசேஷம் என்றால்? டுவிட்டரில் கடும் தாக்குதலுக்கு ஆளான சுஸ்மா சுவராஜூக்கு ஆதரவாக அவரது கட்சியினரோ? சக அமைச்சர்களோ? ஒரு பதிவு கூட பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்தார்.