ஜோகனஸ்பர்க்:

பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் ஜூலை மாதம் நடைபெறுகிறது. இது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் தென் ஆப்ரிக்கா வந்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்க நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் லுவெல்லின் லான்டர்ஸ்-ஐ, சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். பின்னர் அந்நாட்டு அதிபர் சைரில் ரமபோசாவை சுஷ்மா சுவராஜ் சந்தித்து இருநாட்டு உறவுகள் மேம்பாடு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.