பன்னாட்டு தூதர்களுக்கு ரம்ஜான் விருந்து அளித்த சுஷ்மா ஸ்வராஜ்

டில்லி

த்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பன்னாட்டு தூதர்களுக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் ரம்ஜான் விருந்து அளித்துள்ளார்.

வழக்கமாக பிரதமர் அளிக்கும் ரம்ஜான் விருந்து மோடி பதவி ஏற்றதில் இருந்து அளிக்கப்படுவதில்லை.  அத்துடன் ராஷ்டிரபதி பவன் எனப்படும் குடியரசுத் தலைவர் மாளிகையிலும் ரம்ஜான் விருந்து நிறுத்த்ப்பட்டுள்ளது.   இவ்வாறு பல அமைச்சகங்களும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவும் ரம்ஜான் விருந்தை நிறுத்தி உள்ளன.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ரம்ஜான் விருந்து ஒன்றை அளித்துள்ளார்.   அந்த விருந்துக்குக்கு பல்வேறு நாட்டு தூதர்களும், தூதரக அதிகாரிகளும் வந்திருந்தனர்.  உலகம் அனைத்தும் ஒரே குடும்பம் என்னும் நோக்கத்தில் இந்த விருந்து அளிக்கப்படுவதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நடுகளில் இந்தியாவும் ஒன்று.   இந்திய நாட்டு மக்கள் மதம், மொழிகள், உணவுப் பழக்கங்கள், கலாச்சாரத்தினால் விதம் விதமாக மாறி  இருந்தாலும் பண்டிகை கொண்டாட்டங்களில் வேறுபடுவ்தில்லை.

இந்தியர்களாகிய நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்னும்கொள்கையுடன் இருந்து வருகிறோம்.   அதே போல உலக மக்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக பார்க்கும் நோக்கத்தில் இந்த விருந்தை அளிக்கிறோம்.  எங்கள் நாட்டு மக்களிடையே வெறுப்புணர்ச்சியோ வன்முறையோ அணுக நாங்கள் எப்போதும் அனுமதிப்பதில்லை.

ரம்ஜான் பண்டிகை என்பது உண்டு, பருகி மகிழும் பண்டிகையாக இல்லாமல் உலக இச்சைகளை விலக்கும் பண்டிகையாக உள்ளது.   மனிதர்களின் சுயக் கட்டுப்பாட்டை இந்த ரம்ஜான் பெரிதும் உக்குவிக்கிறது.   இதன் மூலம் இயந்திர வாழ்க்கையில் இருந்து ஆன்மீக வாழ்க்கையில் ஒரு மாதம் முழுவதும் இச்ஸ்லாமியர்கள் வாழ்கின்றனர்.: எனக் கூறி உள்ளார்.