சார்க் நாடுகள் கூட்டத்தில் பாதியில் வெளியேறிய சுஷ்மா ஸ்வராஜ்

வாஷிங்டன்

சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மோடிக்கு அமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்கக் கோரி கடிதம் எழுதினார்.   அதை ஒட்டி வாஷிங்டனில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்  ஷா முகமது குரேஷி மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என கூறப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியக் காவலர்களை கடத்திக் கொலை செய்ததால் அதிருப்தி அடைந்த இந்தியா பேச்சு வார்த்தையை ரத்து செய்தது.   இந்நிலையில் சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் அதிகார பூர்வமற்ற கூட்டம் ஒன்று இன்று  நேபாள நாட்டு வெளியுறாவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு சென்றிருந்த சுஷ்மா ஸ்வராஜ்  கூட்டத்தின் இடையில் வெளியேறினார்.   பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் ஷா முகமது குரேஷி அந்த் கூட்டத்தில் கலந்துக் கொண்டதால் சுஷ்மா வெளியேறியதாக தகவல்கள் பரவின.   ஆனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் அதை மறுத்துள்ளனர்.   அவருக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் இருந்ததால் அவர் அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி தம்மை கண்டதால் சுஷ்மா கூட்டத்தில் இருந்து வெளியேறவில்லை எனவும் அவருக்கு வேறு வேலைகள் இருந்திருக்கலாம் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம் எனக் கூறி உள்ளார்.  மேலும் அவர்  ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேச வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சுஷ்மாவுக்கு முன்பே பாதியில் வெளியேறியதை சுட்டிக் காட்டி உள்ளார்.

You may have missed