அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு சிறுநீரக கோளாறு

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடுமையான சர்க்கரை வியாதியின் காரணமாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
sushma

64 வயதான அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 20 வருடங்களாக கடுமையான சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இதன் விளைவாக அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படவே கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாம் தற்போது டயாலிசிஸ் எடுத்துவருவதாகவும், விரைவில் தாம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருப்பதாகவும் தம்மை கடவுள் கிருஷ்ணர் ஆசீர்வதிப்பார் என்றும் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார்.