நடிகர் அஜீத்தை தற்கொலை மனநிலைக்கு தள்ளிய ஃபைனான்சியர் அன்பு!: இயக்குநர் சுசீந்திரன் பகீர்

அஜீத் – அன்பு – சுசீந்திரன்

ற்போது தற்கொலை செய்து கொண்ட அசோக்கின் மனநிலையில்தான், நான் கடவுள் படத்தின் போது அன்புச் செழியனால் நடிகர் அஜித் இருந்தார் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“அசோக் அண்ணனின் மரணம் தமிழ் சினிவால் கடைசி மரணமாக இருக்க வேண்டும்.

அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்து கொள்கிறேன். “நான் கடவுள்’ நேரத்தில் இந்த அன்பு செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கல் லிங்குசாமி, கெளதம்மேனன், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேர், பல நடிகர்களும் இந்த அன்புச் செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் இமான் இசையமைப்பாளரிடமும் கூட எந்த படத்துக்கு இசையமைக்க வேண்டும் என மறைமுகமாக சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்குக் காரணமான அன்பு செழியன் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுக்கும் வருவாய்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதிபனம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு நடத்தவும்” என்று அந்த அறிக்கையில் சுசீந்திரன்  தெரிவித்துள்ளார்.