நான் ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டதாக வந்த தகவல் தவறானது: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

புதுடெல்லி:

ஆந்திர மாநில ஆளுநராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் தவறானது என முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.


மக்களவை தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடவில்லை.

உடல்நலக் குறைவு காரணமாக அவர் போட்டியிட வில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திர மாநில ஆளுநனராக நியமிக்கப்பட்டதாக இன்று தகவல்கள் பரவின.

இந்த தகவலை சுஷ்மா ஸ்வராஜ் மறுத்துள்ளார். நான் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தகவல் தவறானது என்று அவர் தெரிவித்துள்ளார்.