கேரளாவில் நீட் தேர்வின்போது அநாகரிகமாக செயல்பட்ட ஆசிரியைகள் சஸ்பெண்ட்!

--

கண்ணூர்,

ருத்துவநுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.

தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளிடம் சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியைகள் அத்துமீறி நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கேரளாவில் உள்ள  கண்ணுார் பகுதியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின்  போது உள்ளாடையை அகற்ற செய்து அநாகரிகமாக ஒருசிலஆசிரியைகள் நடந்துகொண்டனர்.

இந்த சம்பவம், தேர்வு எழுத வந்த பிற மாணவ, மாணவியரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது .இதற்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் விஜயன் தனது கண்டனத்தை பதிவு செய்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

மகளிர் சங்கங்களும், மனித உரிமை கமிஷனும் இதுகுறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளன.

இந்நிலையில் இந்த அநாகரீக செயலில் சோதனை  என்ற பெயரில் ஈடுபட்ட 4 ஆசிரியைகளை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

You may have missed