சென்னை:

மிழகத்தில் 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் வரும் 18ம் தேதி முதல் தொடங்கும் என்று   தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலருக்கான உடற்தகுதி தேர்வு 10 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, கடந்த 6ம் தொடங்கி 15ந்தி வரை நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த 6,7,8 ஆகிய மூன்று தினங்களில் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.

இதற்கிடையில் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வந்ததைத் தொர்ந்து, பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால்,  தற்காலிகமாக உடற்தகுதி தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. கடநத 9ந்தேதி தீர்ப்பு வெளியாகி விட்டதால், மீண்டும் உடற்தகுதி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

வருகிற 18-ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் போலீஸ் உடல் தகுதி தேர்வு மீண்டும் நடைபெற உள்ளது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக,  உடற்தகுதி தேர்வு நடக்கவிருக்கும்15 மையங்களுக்கும் அவசர சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.