யக்குனர் மிஷ்கின் நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,தற்போது படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக வலம் வருபவர்கள் மிஷ்கின், சுசீந்திரன்.  இவர்கள் இருவருடன் நடிகர் விக்ராந்த் இணைந்து நடிக்கும் படம்  ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

ஏற்கனவே ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா  இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்தை  கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று டிரெய்லர் வெளியாகி உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=J88aXdC4iAY]