பொன் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் மீண்டும் பங்கேற்பு

சென்னை:

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்ட எஸ்.வி.சேருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது முன் ஜாமீன் மனுவும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அவரை கைது செய்ய தடையில்லை என்றும் நீதிமன்றமும் அறிவித்துவிட்டது.

 

இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி. சேகர் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வெளியானது.
இதையடுத்து சென்னையில் நேற்று நடந்த வின் டிவி அதிபர் தேவநாதன் பிறந்த நாள் விழாவிலும் பொன் ராதாகிருஷ்ணனோடு எஸ்.வி.சேகர் கலந்துகொண்டார். இதில் மாநில சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.