சென்னை:
நடிக்ரகள் எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் சுவாதி – ராம்குமார் கொலை வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று, ராம்குமாரின் வழக்கறஞர் ராமராஜ் கூறியுள்ளார்.
இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

எஸ்.வி.சேகர் - சுவாதி
எஸ்.வி.சேகர் – சுவாதி

ராம்குமார் உடல், பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  அம்மருத்துவமனை வாசலில், ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “ராம்குமார் பிரேதத்தை பார்க்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  ராம்குமார் கண்டிப்பாக தற்கொலை செய்ய வாய்ப்பில்லை.இந்த சாவில் எங்களுக்கு மர்மம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை..அவர்களே கொன்று விட்டு அவர்களே தரும் அறிக்கையை நாங்கள் ஏன் நம்ப வேண்டும்.
எங்கள் முன் பிரேத பரிசோதனை நடக்க வேண்டும்..சிறுபான்மையினரை அரசும்,ஊடகமும் ஆதரிப்பது இல்லை.அரசியல் கட்சி தலைவர்கள் துணிவுருந்தால் இந்த கொலை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.  நீதியை நிலை நாட்ட வேண்டும். மற்ற கொலை,கொள்ளை சம்பவத்தை விட ஊடகம் இதில் அதிகம் கவனம் செலுத்துவதற்கான காரணம் ராம்குமார் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன் என்பது மட்டுமே. எஸ்.வி.சேகர்,ஒய்.ஜி.மகேந்திரன் ராம்குமார் வழக்கை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர்” என்று வழக்கறிஞர் ராமராஜ் தெரிவித்தார்.