எஸ்.வி.சேகரின் சிறை ஆசை நிறைவேற்றப்படும்! தமிழக அமைச்சர் தகவல்

சென்னை:  தமிழக பாஜக உறுப்பினரும் காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் மீது தேசிய மரியாதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசையாக இருந்தால், அதை அரசு நிறைவேற்றும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

பாஜக உறுப்பினராக காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், சமீபத்தில், தேசியக் கொடியை அவமதித்ததற்காகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காகவும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் மீது,  ஐபிசி  124 ஏ, 153 பி மற்றும் தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 இன் பிரிவு 2 இன் கீழ் பதிவு செய்ய  வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

 தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோரின் மாறுபட்ட கருத்தால் கட்சியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே, அதிமுக தற்போதே தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், சென்னை காசிமேட்டில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக பாஜக தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும். பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியதை பாஜகவின் நிலைப்பாடாக எடுக்க முடியாது.

எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதனை அதிமுக அரசு நிறைவேற்றும். எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை அவமதித்து, முதல்வரை அவதூறாக பேசியதை ஏற்க முடியாது.

சென்னையில் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.தடுப்பூசியை கண்டுபிடித்து மக்கள் பயன்படுத்தினால் கொரோனா இல்லாத இந்தியா உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.