புனே: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் ரத்துசெய்யப்பட்டது சரிதான் என்றும், ஆனால் நாட்டின் பொருளாதார நிலை சரிசெய்யப்பட வேண்டுமென்றும், அப்போதுதான் தேச கட்டமைப்பும் தேசப் பாதுகாப்பும் வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளார் மூத்த பா.ஜ. தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி.

அவர் கூறியுள்ளதாவது, “நாட்டின் பொருளாதார நிலை சரிசெய்யப்பட வேண்டும். எனது ஆலோசனைகள் தேவையான இடங்களில் செவிமடுக்கப்படுவதில்லை. அதேசமயம், சட்டப்பிரிவு 370 விஷயத்தில் எனது ஆலோசனை செவிமடுக்கப்பட்டு சரியாக பின்பற்றப்பட்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் காலத்தில் பின்பற்றப்பட்ட தவறான கொள்கைகளே இன்றைய பொருளாதார மந்த நிலைக்கு காரணம். மேலும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை உயர்த்தியதும் ஒரு காரணம்.

அருண்ஜெட்லியின் காலத்தில் பின்பற்றப்பட்ட தவறான கொள்கைகள் இன்றும் நடப்பில் உள்ளன. அதிக வரிவிதிப்பு உள்ளிட்ட சில காரணிகள் பொருளாதாரத்தை மோசமாக்கிவிட்டன. பொருளாதாரத்திற்கு அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பு வலுப்படும் என்றார் அவர்.