லண்டன்: இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்திய தொடரில் பொறுமையாக செயல்பட்டால், வெற்றியை ஈட்டலாம் என்றுள்ளார் அந்த அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் கிரீம் ஸ்வான்.

அவர் கூறியுள்ளதாவது, “நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் தட்டையானவை என்பதால், பந்துகள் நன்றாக சுழலும்; சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்.

இந்தியாவுக்கு எதிராக நன்றாகக் கட்டுக்கோப்பாக இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினால், அவர்களும் அந்தப் பந்துவீச்சுக்கு மரியாதை கொடுத்து விளையாடுவார்கள். இந்திய அணியில் தற்போது வீரேந்திர சேவாக் இல்லை. விராத் கோலிதான் இருக்கிறார். விராத் கோலி, சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது, மோசமான பந்து வரும்வரை காத்திருப்பார்.

இந்திய அணி மிக மிக பொறுமையானது. அதேபோன்று இங்கிலாந்து அணியும் பொறுமையாக இருந்து, நாள் முழுவதும் பந்துவீசினால், விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அவர்களுக்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், அப்போது நீங்கள் உங்களின் பிடிமானத்தை இழந்தாலும் அதனால் பரவாயில்லை.

என்னைப் பொறுத்தவரை, இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியில் ஆஃப் ஸ்பின்னர் லீச் இடம் பெறுவது இங்கிலாந்து வெற்றியை பிரகாசப்படுத்தும். இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு நேராகப் பந்துவீசுவது, மிடில் ஸ்டெம்ப்பை நோக்கி வீசுவது, மிடில் ஸ்டெம்பை தகர்க்கும் வகையில் பந்துவீசினாலே போதுமானது.

ஜேக் லீச் நாள்தோறும் 40 ஓவர்கள் பந்துவீசினால், மற்ற வேகப்பந்துவீச்சாளர்களான மார்க் உட், ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரை மாற்றிப் பயன்படுத்தலாம்” என்றுள்ளார் ஸ்வான்.