போலி சான்றிதழ் பயன்படுத்தி அரசு வேலை… ஸ்வப்னா சுரேஷை காவலில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல்…

திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தங்கக்கடத்தல் வழக்கில், உயர்அதிகாரிகள் சிக்கி உள்ள நிலையில், கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் தில்லுமுல்லு அம்பலமாகி உள்ளது. அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

கேரளா அரசியலில் பூகம்பதை ஏற்படுத்தி உள்ளது, தூதரகம் பெரியல் தங்கம் கடத்திய விவகாரம். இதில், முதல்வரின் தனிச்செயலாளர் உள்பட பல அரசு உயர்அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, கடத்தல் விவகாரத்தை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலில்  ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த  தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில், கேரள மாநில தொலைத் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கும், முதல்வரின் தனிச்செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஸ்வப்பான சுரேஷ் தலைமறைவானர். அவரை பிடிக்க நாடு முழுவதும் வலைவிரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில்  தலைமறைவான ஸ்வப்னா பெங்களூரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஸ்வப்பான சுரேசைவரையும், சந்தீப் நாயரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து கேரளா அழைத்து வந்தனர்.

கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தி, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட  அவருக்கு நடத்தப்பட்ட  கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில், அவருக்கு கொரோனா இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவர் பட்டதாரியே இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.  மேல்நிலைக் கல்வியான 12ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஸ்வப்னா, பி.காம். படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து, அரசு அதிகாரிகளை தனது வலையில் வீழ்த்தி அரசு  பணியில் சேர்ந்தது அம்பலமாகி உள்ளது. 

மேலும் பல ஆண்டுகளாக இதுபோன்ற தங்கக்கடத்தலில் அவர் ஈடுபட்டு வந்திருப்பதும்,   தங்கக் கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில்  தெரிய வந்துள்ளது. இதையடுத்து,   கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தங்கக் கடத்தல் குறித்த ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி