சுவாதி வழக்கு: போலீசாரை பின்தொடரும் மர்ம இளைஞர் யார்?

சென்னை:

 சுவாதி கொலை வழக்கில் இன்னும் பல மர்மங்கள் விலகியபாடில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், சுவாதியின் செல்போனை எடுத்துச்சென்றாரா..ஏன்? சுவாதி பதிவுத்திருமணம் செய்துகொண்டாரா? வழக்கமாக சுவாதி செல்லும் ஆட்டோ ஓட்டுனர், லேப்டாப் குறித்து யாரிடமோ போனில் வாக்குவாதம் செய்ததாக  தெரிவித்தது உண்மையா…  இப்படி பலவித சந்தேகங்கள்.

இதற்கிடையே சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்கை நேற்று காவல்துறையினர் விசாரித்தனர்.

இந்த நிலையில் ராம்குமார் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டது முதல் தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்படுவது வரை ராம்குமார் தொடர்பான நிகழ்வுகளுக்கு எல்லாம்  ஒரு வாலிவர் வந்து கண்காணித்துக்கொண்டே இருந்தார்.

swathi case

( மேலே உள்ள படத்தில்  உள்ள  வாலிபர் ) ராம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போதும், பின்னர்  கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட போதும் கடந்த இரண்டு நாளாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட போதும்  அந்த குறிப்பிட்ட வாலிபர்  பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களுடன்  கலந்து நின்று கொண்டு கண்காணித்து வந்தார்.

இன்று நுங்கம்பாக்கம்  காவல் நிலையத்தில்  சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்  மற்றும் ராம்குமாரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த போதும் மஞ்சள் கலர் டி.ஷர்ட்டுடன் அந்த வாலிபர் சந்தேகப்படும் வகையில் திரிந்து கொண்டிருந்தார்.  இதனால் சிலர் அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் விசாரணை  அதிகாரிகளிடம் தெரிவித்த போது அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் நழுவிவிட்டார்.

தற்போது அந்த நபர் யார் என  காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். அவர் ராம்குமாருக்கு வேண்டிய பட்டவரா? ராம்குமாரின்  நண்பரா? அல்லது ஆர்வக் கோளாறினால் இந்த வழக்கை தொடர்ந்து வேடிக்கை பார்க்க வந்தவரா  என அவரை பிடித்துவிசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்பதால்  காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.