கணவருக்கும், எனக்கும் இடையே பிரச்சனையா? ஸ்வாதி விளக்கம்….!

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த ஸ்வாதி, தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.

 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள ஸ்வாதி, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் வாசு என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

 

https://www.instagram.com/p/B_HYrJmAQi1/

இதனால் அவர் கணவரைப் பிரியவுள்ளதாகவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் கசிய ஆரம்பித்தது .

இந்நிலையில் கணவருடன் தான் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மற்றவர்கள் யாரும் பார்க்காதபடி மறைத்து வைத்திருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.