சுவாதியைக் கொன்றது “முத்துக்குமார்”! தஞ்சையில் பதுங்கியிருக்கிறார்! தமிழச்சி சொல்லும்  அதிர்ச்சி தகவல்!

--

சென்னை:

ளம் பெண் சுவாதி படுகொலை மதத்துக்காக  நடத்தப்பட்ட ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மையான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி என்பவர் தனது  முகநூல் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

swathi-ramkukar

“சுவாதி படுகொலை சாதிக்காக நடத்தப்பட்ட ஆணவக்கொலை! “ என்ற தலைப்பில் தமிழச்சி எழுதியுள்ள பதிவு:

“சுவாதி படுகொலை செய்யப்பட்ட அன்றைய பரபரப்பான தினத்திலேயே ‘சுவாதியை கொன்றது பிலால் என்ற இஸ்லாமிய இளைஞர்’ என்று பொது ஊடகங்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலரால் ஏற்படுத்தப்பட்ட ‪#‎வதந்தி என்பது போகிற போக்கில் ‘உளறுவாயன்கள்’ பேசிய பேச்சல்ல.

அந்த வதந்திக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து ‪#‎ஓய்ஜிமகேந்திரன்போன்ற ‪#‎பார்ப்பான்கள் பரப்பிய அதிபயங்கர‪#‎இஸ்லாமிய_வெறுப்பு_அரசியல் சாதாரணமாக நடந்தவையல்ல. அனைத்தும் திட்டமிட்டே இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டவை.

‪#‎சுவாதி அம்மாவை வைப்பாட்டியாக வைத்திருக்கும்‪#‎சந்தான_கோபலகிருஷ்ணன் மற்றும் அவருடைய தம்பி இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் மட்டுமல்ல. தீவிர ‪#‎இந்துத்துவவாதிகள்.

சுவாதி, இஸ்லாமியரான பிலால் என்பவரை காதலிப்பதும் மதமாறும் முயற்சியில் இருப்பதை அறிந்து சந்தான கோபலகிருஷ்ணன்….

“ஆச்சாரமான பார்ப்பனீய குடும்பமான தம்முடைய அக்ரகாரத்திற்குள் ஒரு இஸ்லாமியனை மருமகனாக்க அனுமதிக்க முடியாது” என்று கண்டித்து இருக்கிறார்.

ஆனால் சுவாதி பிலாலை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததோடு, குடும்பத்தினருக்கு தெரியாமல் ரிஜீஸ்டர் திருமணத்தையும் செய்துவிட்டார். இதற்கு பிறகே வலுக்கட்டாயமாக பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு சுவாதி வரவழிக்கப்படுகிறார்.

அடுத்தகட்டமாக சந்தான கோபலகிருஷ்ணன் இந்துத்துவ அமைப்பினரோடு தீவிரமாக கொலைக்கான திட்டத்தை நடத்துகிறார்.

thamilachi-face

பிலாலை கொல்லுவதைவிட சுவாதியை கொல்ல வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். சுவாதி தன் மகள் இல்லை என்பதைவிட, தன்னை மதிக்காமல் தன் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்ட சுவாதியை படுகொலை செய்ய உருவாக்கிய திட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்து / இஸ்லாமியர்களிடையே கலவரத்தை தூண்டிவிடவும் பழியை இஸ்லாமியர்கள் மீது போட்டுவிட வேண்டும் என்பதுமே சந்தான கோபலகிருஷ்ணன் சார்ந்துள்ள இந்து அமைப்பின் ‪#‎சதி_திட்டம். அதன்படியே சுவாதி கொல்லப்பட்ட அன்று பிலால் தான் கொன்றான் என்ற வதந்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

ஒருவேளை பிலால் பிடிபட்டால் சுவாதி இஸ்லாமியனை திருமணம் செய்த மேட்டரெல்லாம் வெளியே வந்துவிடுமோ என்று இன்னொருபுறம் பதற்றம். அப்போதைக்கு யாரையாவது குற்றவாளியாக்கி விடுவோம் என்ற சில அரசியல் புள்ளிகளின் திட்டத்தில் மாட்டியவர் தான்‪#‎ராம்குமார்.

ராம்குமார் கழுத்தை அறுத்தது போலிசுடன் வந்திருந்திருந்த அடியாட்கள் என்பது பொது ஊடகங்களில் மக்கள் நலம் விரும்பிகளால் அம்பலப்படுத்தப்பட்டதும் சுவாதியின் கொலை விசாரணை தடுமாற ஆரம்பித்தது. அவசர அவசரமாக இந்துத்துவ அமைப்பு ராம்குமாரை விடுவிக்க வேண்டும் என்று அவ ர்கள் சார்ந்த வக்கிலை அனுப்பி அதுவும் பல விதாதங்களால் முறியடிக்கப்பட்டது.

இந்நிலையில் பிலாலிடம் ‪#‎காவல்துறை ‪#‎விசாரணை நடத்தி அவர் என்ன சொன்னார் என்பதை வெளியிட மறுத்தது. தற்போதைக்கு ராம்குமார்தான் குற்றவாளி என்பதை நிறுபித்து விசாரணையை முடித்து இந்துத்துவவாதிகளை காப்பாற்ற சில முக்கிய அரசியல்வாதிகளால் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

சுவாதியை கொலை செய்தவர் பெயர் ‪#‎முத்துக்குமார். தற்போது தஞ்சாவூரில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறார். சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர்கள். இவர்களை பாதுகாப்பது சந்தான கோபலகிருஷ்ணனும் அவருடைய தம்பியும். அவர்கள் திட்டங்களுக்கு உடந்தையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலர்.

இத்தனையும் தவறு. தமிழச்சி என்பவர் எங்களை குறித்து அநாகரிகமாகவும், தவறாகவும், கண்ணியமின்மை இன்றி தொடர்ச்சியாக பொய் குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார் என்று என் மீது நடவடிக்கை­ எடுக்க வேண்டும் என்று சட்ட ரீதியாக சந்தான கோபலகிருஷ்ணனும் அல்லது அவருடைய தம்பியும் ‪#‎புகார்கொடுப்பார்களானால் எனது வழக்கறிஞர் மூலமாக அனைத்து ஆதாரங்களையும் இந்திய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன்.

இதற்கு சந்தான கோபலகிருஷ்ணனும் அல்லது அவருடைய தம்பியும் தயாரா?” இவ்வாறு தனது பதிவில் தமிழச்சி கூறியுள்ளார்.