திருவாரூர்:
சென்னை சுவாதி  கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாகவும், இந்த கொலையில் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும், திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர்,  முகநூலில் தொடர்ந்து எழுதி வந்தார்.
இதையடுத்து கருப்பு முருகானந்தம்  அளித்த புகாரின் அடிப்படையில் திலீபன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது சுவாதி கொலையில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை தெரியப்படுத்தப்போவதாக கூறினார். மேலும்  சுவாதி கொலை குறித்த ரகசியங்களை வெளிப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

சுவாதி - ராம்குமார் - திலீபன் மகேந்திரன் (பழைய படம்)
சுவாதி – ராம்குமார் – திலீபன் மகேந்திரன் (பழைய படம்)

இந்த நிலையில் நேற்று திருவாரூர் நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் திலீபன் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் வழக்கறிஞர் தர்மபாலாவும் தாக்கப்பட்டுள்ளார். சுவாதி கொலை வழக்கு குறித்து பேசக்கூடாது என்று கூறியபடியே மர்ம நபர்கள் தாக்கியதாக தர்மபாலா தெரிவித்தார்.
கடுமையான தாக்குதலால் மயக்கமடைந்த திலீபனும், வழக்கறிஞர் தர்மபாலாவும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.