சென்னை:
சுவாதி கொலை வழக்கில் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுற்றதாகவும், அதில் ராம்குமாரின் சட்டையில் இருந்த ரத்தம் சுவாதி ரத்ததோடு ஒத்து போவதாக வெளியான தகவல் தவறானது என்று இந்த வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியும் கூடுதல் ஆணையருமான சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் சுவாதி கொலை வழக்கு குறித்து பல்வேறுவிதமான தகவல்கள் அதிககரப்பூர்மின்றி வெளியாகின்றன. இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கில் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுற்றதாகவும், அதில் ராம்குமாரின் சட்டையில் இருந்த ரத்தம் சுவாதி ரத்ததோடு ஒத்து போவதாகவும் ஒரு தகவல் வெளியானது.
ramkumar-swathy32-05-1467723672
இதை, இந்த வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியும் கூடுதல் ஆணையருமான சங்கர் மறுத்துள்ளார்.
இதுபற்றி கூறிய அவர், ரத்த மாதிரி பரிசோதனை செய்ய  இன்னும் கால அவகாசம் தேவை. தவிர , சென்னையில் தடய அறிவியல் துறையில் தான் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும்,  தற்போது நடப்பது,   ரத்த மாதிரி சோதனை தான்  டிஎன்ஏ சோதனை என  வெளிவரும் தகவலும் தவறானது” என்று சங்கர் தெரிவித்தார்.