சுவாதி கொலை வழக்கு: பேஸ்புக் தமிழச்சி, திலீபன் மகேந்திரன் மீது கருப்பு முருகானந்தம் புகார்

கருப்பு முருகானந்தம் - ராம்குமார் - சுவாதி

கருப்பு முருகானந்தம் – ராம்குமார் – சுவாதி

சுவாதி கொலை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி, பேஸ்புக்கில் எழுதி வெளியிட்டு, தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிற்கும் வகையில் செயல்படும் தமிழச்சி மற்றும் திலீபன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தமிழச்சி
தமிழச்சி

இளம் பெண் சுவாதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை காதலித்ததாகவும், ஆகவே சுவாதியின் குடும்பத்தினரே ஆள் வைத்து அவரை படுகொலை செய்தனர் என்றும் பேஸ்புக்கில் தமிழச்சி என்பவரும், திலீபன் மகேந்திரன் என்பவரும் எழுதி வருகிறார்கள். இந்த கொலையில்  பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் எழுதி வருகிறார்கள்.

திலீபன் மகேந்திரன்
திலீபன் மகேந்திரன்

இந்த நிலையில், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தமிழச்சியும், திலீபனும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்றும்,  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என்றும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் கருப்பு முருகானந்தம் புகார் அளித்துள்ளார்.

புகார் கொடுத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருப்பு முருகானந்தம், தம்மீது களங்கம் விளைவிக்கும் வகையில் தமிழச்சி மற்றும் தீலிபன் ஆகியோர் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையில் புகார் அளித்ததாக  தெரிவித்தார்.

ஏற்கெனவே திலீபன் மகேந்திரன் மீது திருவாரூர் டவுன் காவல் நிலையத்திலும் தமிழச்சி மீது திருவாரூர் எஸ்.பியிடமும் கருப்பு முருகானந்தம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கார்ட்டூன் கேலரி