சென்னை:
சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ மாற்றக்கோரி ராம்குமார் தாய் புஷ்பம் தொடர்ந்த வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்த கொலை குறித்து பலவிதமான சந்தேகங்கள் உலா வரும் வேளையில், தமிழச்சி என்பவர்  சுவாதி கர்ப்பம் என்றும், கொலை செய்த ராம்குமார் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும், இது சாதிக்கொலை என்றும், மதக்கொலை என்றும் ஆளாளுக்கு மாறி மாறி குற்றம் சாட்டி வரும் வேளையில்,
ramku
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் தயார் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
சென்னையை சேர்ந்த சுவாதி கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில்  கொலை செய்யப்பட்டார். அதன் காரணமாக ராம்குமார் கைது செய்யப்பட்டார்.. ஆனால்,  கொலை தொடர்பாக பிலால் சித்திக் மீது சந்தேகம் என்று செய்தி வெளியானது. அவரிடம் 4 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினர்.  போலீசார் உன்மையை மறைத்து உள்ளனர்.
போலீஸ் விசாரணை ஒரு தலைபட்சமாக உள்ளதால் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை பாதுகாக்க சட்டவிரோத புலன் விசாரணை நடத்துகிறார்கள். கொலை வழக்கில் என் மகன் ராம்குமார் குற்றவாளியென்று தவறாக சேர்க்கப்பட்டுள்ளான். வழக்கில் மோசமான புலன் விசாரணை நடக்கிறது. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு ஐகோர்ட்டு  நீதிபதி பிரகாஷ் முன்விசாரணைக்கு வந்தது.  அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், வழக்கில் உண்மை குற்றவாளிகள் மறைக்கப்பட்டு போலியாக ராம்குமார் கைது செய்யபட்டுள்ளார். எனவே விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார்.
ஆனால், போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், சுவாதி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை முறையாக நடந்து வருகிறது. இதுதொடர்பான ஆவணங்களை  கோர்ட்டில் தாக்கல் செய்வதாக கூறி ஆவணங்களை அளித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.