சுவாதி கொலை: அரசியல்-சாதிக்கு அப்பாற்பட்டு விசாரணை  – இல.கணேசன் கோரிக்கை

மதுரை:

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல்-சாதி தலையீடு இல்லாமல் விசாரணை நடைபெற வேண்டும் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர்  இல.கணேசன் தெரிவித்தார்.

ela ganesan

மதுரை வந்த இல.கணேசன்  நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்துக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களை மத்தியில் ஆழும் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சீக்கிரிமே நல்ல முடிவு கிடைக்கும்.

சென்னையில் கொலை செய்யப்பட்ட பொறியாளர் சுவாதி விவகாரத்தில் அரசியல், சாதி தலையீடு இல்லாமல் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் தமிழக அரசின் நிலைப்பாட்டை முதலில் தெரிவிக்க வேண்டும் என்றார்.