சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், வாக்குமூலம் அளித்ததாக தகவல் பரவியிருக்கும் நிலையில், அவன் பேசுவதற்கு இரண்டு நாள் ஆகும் என்று நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் சித்தி அததியமுனவரா தெரிவித்துள்ளார்.

சுவாதியைக் கொலை செய்ததாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய முயன்றபோது, ராம்குமார் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றான். தற்போது  நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் ராம்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

13438867_1248655941826028_2597545622573950939_n

ராம்குமார் உடல் நிலை குறித்து மருத்துவமனை முதல்வர் சித்தி அத்தியமுனவரா தெரிவித்ததாவது:

“இப்போது பேச அனுமதி இல்லை.. பேச முடியாது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ராம்குமார் இந்த மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவர் கொண்டுவரப்பட்டவுடன், இரவுப்பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும்  ஈ.என்.டி. ஸ்பெசலிஸ்ட்டுகள் சிகிச்சை அளித்தனர்.

தீவிரசிகிச்சை பிரிவில் ராம்குமாரை அனுமதித்திருக்கிறோம். கழுத்துப்பகுதியில் ஆழமான வெட்டு இருக்கிறது. உயிருக்கு ஆபத்து இல்லை.  ஆனால் இன்னும் இரு நாட்களுக்கு பிறகே கண்விழித்து பேசும் நிலைக்கு வர முடியும்.

இடையில் கண்விழித்து பேசினார் என்பதை நம்ப முடியவில்லை. அவரது உடல் நிலையை கண்காணித்து வருகிறோம். உடல் நிலை தேறியவுடன், மருத்துவர்களின் ஆலோசனைப்படி  காவல்துறை அவரிடம் விசாரணை நடத்த அனுமதிப்போம்.”

  • இவ்வாறு நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் சித்தி அததியமுனவரா தெரிவித்தார்.