சுவாதியைக் கொன்ற கொலையாளி ராம்குமார் சென்னையில் தங்கியிருந்த லாட்ஜ் (மேன்சன்) காவலாளி, காவல்துறை வெளியிட்ட அவனது புகைப்படத்தை பார்த்துவிட்டு போலீ சாருக்கு தகவல்களை  தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராம்குமாரின் முகவரி அறிந்து செங்கோட்டை அருகில் உள்ள ராம்குமாரின் தென் பொத்தை கிராமத்துக்கு   தனிப்படை போலீசார் மஃப்டியில் சென்றனர்.
நேற்று காலை முதலே அவரது வீடு இருந்த பகுதியில் நோட்டம் விட்டு வந்தனர். ஊர் வயலில் ராம்குமார் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான்.

ராம்குமார்
ராம்குமார்

நேற்று  இரவு அனைவரும் தூங்கிய பிறகு அவரை பிடிக்க காவல்துறையினர்  திட்டமிட்டனர்.  அதன்படி,ல் அவரது வீட்டிற்கு போலீசார் நுழைய முயற்சித்தனர். அப்போது  ராம்குமார் வீட்டில் வளர்க்கும் நாய்கள் குரைக்க ஆரம்பித்தன.
இதனால் விழித்துக்கொண்ட  ராம்குமாரின் தாத்தா வீட்டின் கதவை அடைத்து குரல் எழுப்பியிருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த ராம்குமார் கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டான்.
இதையடுத்து வீட்டிற்குள் தடாலடியாக புகுந்த போலீசார் ராம்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
ராம்குமார் தனது கழுத்தை ரத்தம் வழிந்து ஓடியது. உடனடியாக அருகில் இருந்த துணியால் ராம்குமார் கழுத்தில் கட்டுப்போட்ட போலீசார், தென்காசி அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக கொண்டு சென்றனர்.
ராம்குமார் வீடு
ராம்குமார் வீடு

மருத்துவமனையில் ராம்குமாருக்கு கழுத்து பகுதியில் 16 தையல் போடப்பட்டுள்ளது. பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர்.
ராம்குமார் கண்விழித்ததும், அவனிடம் போலீசார் ஒப்புதல் வாக்குமூலம் பெற முயற்சித்தனர். அப்போது ராம்குமார், தான்தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதேபோல, ராம்குமாரின் தந்தை பரமசிவன், அவரது தாய், தம்பி மற்றும் தங்கையிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். அதே போல ராம்குமாரின் நெருங்கிய நண்பர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது.
ராம்குமார் முழுமையாக உடல் நலம் தேறியதும் சென்னைக்கு அழைத்துவந்து விசாரணையை தொடர இருப்பதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.