”பிரபல எழுத்தாளர்” என்ற பெயரில் முகநூலில் இயங்குபவரின் பதிவு:
·
“Room னு ஒரு படம். ஒரு பொண்ண பல வருசமா ஒரே ரூம்ல அடைச்சி வச்சு குழந்த பெத்துக்க வச்சு குடும்பம் நடத்துவான் ஒருத்தன். 5 வயசான பையனும் அதே ரூம்ல, வெளி உலகம்னு ஒண்ணு இருக்குறதே தெரியாம வளருவான்.
ஒரு நாள் ரொம்ப சின்ன குழந்தையா நடந்துக்குற தன்னோட மகன பாத்து அந்த பொண்ணு கடுப்பாகி, ‘இனிமே நீ பெரிய பையன். இப்டி ரூம்லயே இருக்க கூடாது. தப்பிச்சு போய் போலீஸ்கிட்ட சொல்லு’னு பெரிய ட்ரெய்னிங் குடுத்து, role play லாம் பண்ணி, அவன உடம்பு சரியில்லாத மாதிரி நடிக்க வைப்பா. அவங்கப்பன் வந்து கார்ல ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவான்.
மழை லைட்டா தூறல் போட்டுட்டு இருக்கும். அந்த ரோட்ல நாலஞ்சு பேரோட ஒரு ஆள் நாய கூட்டிட்டு வாக்கிங் போயிட்டு இருப்பார். ஒரு சிக்னல்ல கார் நின்னதும் ஒரு வழியா எகிறி குதிச்சு, ட்ரெய்னிங்ல சொன்ன மாதிரியே ஆளுங்கள பாத்ததும் ‘Help’ னு கத்துவான் அந்த பையன். இந்த பையன பாத்ததும், ‘What’s wrong?’னு கேட்பார் வாக்கிங் போறவர். அவங்கப்பன் அதெல்லாம் ஒண்ணுமில்ல, நீ மூடிட்டு போனு சொல்ல, ‘இந்தா இரு போலிஸ கூப்புடுறேன்’னு உடனே Emergency number க்கு போன் பண்ணிடுவார்.
a
அவங்கப்பன் கெட்டவார்த்தைல திட்டிட்டு அந்த பையன அங்கியே விட்டுட்டு ஓடிடுவான். போலீஸ் வர வரைக்கும் அந்த கம்ப்ளைண்ட் குடுத்தவர் அந்த பையனுக்கு தைரியம் சொல்லிட்டு அவன் கூடவே இருப்பார்.
ஏன் இத சொல்றேன்னா, அந்த நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பொண்ணு கொலைல ‘பப்ளிக்ல கொலை நடந்தும் ஒருத்தரும் தடுக்கல’னு ஒரு சேஃபான அறச்சீற்றத்த முன்வச்சிட்டே இருக்காங்க.
ஏன் ஒருத்தனும் தடுக்க போகலங்குறதுக்கு உண்மையான காரணம் உங்களுக்கு தெரியவே தெரியாதா? நம்மூர்ல சாட்சியங்களுக்கு உண்டான சரியான சட்ட பாதுகாப்பு இல்லை. மற்ற நாடுகளை போல Witness protection program -ல் சாட்சிகளோடு அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்கும் படியான வலுவான பாதுகாப்பு சட்டம் நம்மூர்ல இல்ல. காலம்பூரா போலீஸ் ஸ்டேசன் கோர்ட்டுனு அலைய யாரும் தயாரில்லை. உங்கள் அறத்துக்கெல்லாம் அப்பாற்பட்டது அவனவனோட கமிட்மெண்ட்ஸ்.
முக்கியமான இன்னொரு விஷயம், ஒரு கொலை நடக்குற இடத்துல நீங்க இருக்கீங்கனு வைங்க. உண்மையாவே அந்த கொலை நடக்ககூடாதுனு நெனைக்கிறீங்க. (யார்தான் நடக்கட்டும்னு நெனைப்பாங்க?) அதை தடுக்கவும் உங்களுக்கு துணிச்சல் இருக்கு. நீங்க தடுக்கவும் போறீங்க. உங்க கூட எத்தனை பேர் வருவான்னு நெனைக்கிறீங்க? அந்த ஒற்றுமையும், விழிப்புணர்வுமே நம்மகிட்ட இல்ல. சம்பவ இடத்துக்கு போலிஸே ரொம்ப நேரம் கழிச்சுதான் வந்ததா செய்தி. ரெண்டு மணி நேரம் அந்த பொண்ணோட உடல் ப்ளாட்பார்ம்லயே கெடந்துருக்கு. சும்மா பப்ளிக்க நொட்டை சொல்லிகிட்டு…
ஆமா… , ஃபேஸ்புக்ல எழுதுறது மட்டுந்தான் இங்க safe!”