‘காப்பான்’ படத்தில் இணையும் இணைய தொடர் நடிகை ஸ்வயம் சித்தா….!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’

ஜூன்14-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல ஜுலை 5-ம் தேதி வெளியான ‘சிரிக்கி’ என்ற பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் வில்லனாக சிரங் ஜானி நடித்து வருகிறார். இந்நிலையில் ஆட்டோ ஷங்கர்’ இணைய தொடர் நடிகை ஸ்வயம் இந்த படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி