ஆப்பிரிக்க நாட்டின் பெயரை மாற்றிய அரசர்

லொபாம்பா, ஸ்வாசிலாந்து

ப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்து நாட்டின் பெயரை அந்நாட்டு அரசர் முஸ்வாதி மாற்றி உள்ளார்.

ஆப்பிரிக்காவில் உள்ள சிறு நாடுகளில் ஸ்வாசிலாந்தும் ஒன்றாகும்.   ஆப்பிரிக்காவில் உள்ள மன்னராட்சி நடைபெறும் ஒரே நாடு ஸ்வாசிலாந்து.   இந்த நாட்டின் தற்போதைய அரசர் முஸ்வாதி.    இந்த நாடு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்று 50  ஆண்டுகள் கொண்டாட்டம் சமீபத்த்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கொண்டாட்டத்தின் போது அரசர் முஸ்வாதி நாட்டின் பெயரை ”ஈஸ்வாடினி”  என மாற்றி அமைத்தார்.   இதற்கு ஸ்வாசிகளின் அரசு எனப் பொருள் ஆகும்.   அரசர் முஸ்வாதி பல வருடங்களாக ஸ்வாசிலாந்தை இந்த பெயரில் குறிப்பிட்டு வந்தார்.  தற்போது இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “நான் வெளிநாடு செல்லும் போதெல்லாம் பலரும் ஸ்வாசிலாந்து நாட்டை ஸ்விட்சர்லாந்து என தவறாக புரிந்துக் கொள்கிறார்கள்.   நமது நாட்டின் தனித்தன்மையை காக்கவே இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   இது குறித்து ஐ நா சபைக்கு ஏற்கனவே தகவல் அனுப்பப் பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.