சுவீடன் கால்பந்து அணியின் தூக்கத்தை கெடுத்த ஓட்டல் எச்சரிக்கை மணி

மாஸ்கோ:

உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதற்காக ரஷ்யா சென்று பல நாடுகளின் அணியினர் பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் சுவீடன் கால்பந்து வீரர்கள் சமரா பகுதியில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் ஒன்றில் தங்கியிருந்தனர்.

இன்று இங்கிலாந்துக்கு எதிராகன கால் இறுதி போட்டியில் சுவீடன் அணி விளையாடவுள்ளது. ந்நிலையில் இந்த ஓட்டலில் இன்று காலை திடீரென தீ எச்சரிக்கை மணி ஒலித்தது. அப்போது தூங்கிக் கொண்டிருந்த சுவீடன் வீரர்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டலின் வரவேற்பறைக்கு ஓடி வந்தனர். பின்னர் எச்சரிக்கை மணி தவறாக ஒலித்தது தெரியவந்தது.

இதையடுத்து நிம்மதி பெருமூச்சு விட்ட வீரர்கள் மீண்டும் அறைகளுக்கு சென்றனர். 1994ம் ஆண்டுக்கு பின்னர் சுவீடன் அணி தற்போது தான் உலக கோப்டை கால்பந்து போட்டியின் கால் இறுதி போட்டியில் விளையாடுகிறது. அந்த போட்டி இன்று நடக்கும் நிலையில் அவர்களது தூக்கம் ஓட்டலின் தவறான எச்சரிக்கை மணி கலைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.