சுவாதி கொலை குறித்து, காமெடி நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில்  பேஸ்புக்கில் பதிவிட்டதும், பிறகு அதை நீக்கியதும் தெரிந்த விசயம். இந்த நிலையில், “அந்த பதிவை நீக்கிவிட்டு, வருத்தமும் தெரிவியுங்கள்” என்று அவரது சகலை ரஜினி அட்வைஸ் செய்தது தெரியவந்திருக்கிறது.
ஒய்.ஜி. மகேந்திரனின் பேஸ்புக் கருத்து வெளியான உடனேயே அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் பலர். ஆனால், “வருவது வரட்டும்” என்று ஒரு நாள் முழுதும் பதில் சொல்லாமலே இருந்தார்.
இந்த நிலையில், “சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கும் ஒய்.ஜி. மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.  “தேவைப்பட்டால்  நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்” என்றும் அறிவித்தார்.

ரஜினி  - ஒய்.ஜி. மகேந்திரன்
ரஜினி – ஒய்.ஜி. மகேந்திரன்

இந்த தகவல் எல்லாம் ரஜினிக்கு போனது.. அவரது மனைவியும், மகேந்திரன் மனைவியும் சகோதரிகள். அந்த உரிமையில் ஒய்.ஜி.மகேந்திரனை போனில் உடனடியாக தொடர்புகொண்ட ரஜினி, “. ஏற்கெனவே நமது உறவினர் ரவி ராகவேந்தரின் மகனான இசையமைப்பாளர் அனிருத்தால் பீப் சாங் பிரச்சனை வந்தது, இப்போது நீங்கள் தேவையில்லாமல் கருத்து சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.
நாம் எல்லோரும் கலைஞர்கள். நாம் கலைத்துறையாத் தாண்டி தேவையில்லாமல் பேசி சர்ச்சையில் சிக்கக்கூடாது.
உடனடியாக பேஸ்புக்கில் இருக்கும் அந்த பதிவை நீக்கிவிட்டு, வருத்தம் தெரிவியுங்கள்” என்று சீரியஸாக அட்வைஸ் செய்திருக்கிறார்.
“அந்த பதிவை நீக்கவோ, மன்னிப்பு கேட்கவே ஒய்.ஜி. மகேந்திரனுக்கு விருப்பமில்லை. ரஜினி சொல்லிவிட்டார் அந்த பதிவை நீக்கிய ஒய்.ஜி. மகேந்திரன்  தான் தவறேதும் செய்யவில்லை என்றும், ஒருவேளை யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துவதாகவும் மேம்போக்காக சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே அவருக்கு பதிவை நீக்கவோ, மன்னிப்பு கேட்கவோ விருப்பமில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்” என்கிறர்கள் விவரம் அறிந்தவர்கள்.
எப்படியோ.. ரஜினியால் ஒரு சர்ச்சை அடங்கியிருக்கிறது.