சாலையில் மின்சாரம் தாக்கி உணவு வழங்கும் ஊழியர் மரணம்

டில்லி

னியார் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு வழங்கும் ஊழியர் ஒருவர் டில்லியில் ஒரு திறந்த பள்ளத்தில் விழுந்து மின்சாரம் தாக்கி மரணம் அடைந்துள்ளார்.

தற்போது அனைத்து உணவகங்களிலும் ஸ்விக்கி என்னும் நிறுவனம் மூலம் ஆன்லைனில் உணவுகள் ஆர்டர் செய்து வருகின்றனர்.   இந்த நிறுவன ஊழியர்கள் அந்த உணவகங்களில் இருந்து உணவுப் பொருட்களைப் பெறுக் கொண்டு அதை ஆர்டர் செய்தவரிடம் வீட்டில் கொண்டு போய் வழங்குகின்றனர்.

அவ்வாறு இந்நிறுவனத்தின் டில்லி கிளையில் பணி புரியும் ராகுல் என்பவர் நொய்டா பகுதியில் உணவு வழங்க நேற்று இரவு சென்றுக் கொண்டு இருந்துள்ளார்.    அப்போது வழியில் ஒரு பெரிய பள்ளம் இருந்துள்ளது.   மழை நீர் தேங்கி இருந்ததால் ராகுலால் அங்கு பள்ளம் இருப்பதை காண முடியவில்லை.

அதனால் பள்ளத்தில் அவர் சென்ற இருசக்கர வாகனம் தவறி விழுந்து அவரும் கீழே விழுந்துள்ளார்.  அப்போது பிடிப்பதற்காக பக்கத்தில் இருந்த ஒரு மின்சார விளக்கு கம்பத்தை பிடித்துள்ளார்.   மழையின் காரணமாக அங்கு மின்கசிவு இருந்துள்ளது.  அதனால் மின்சாரம் தாக்கி அவர் அங்கேயே இறந்துள்ளார்.

இதை நேரடியாக பார்த்த சிலர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.  அவர்கல் மீட்புப் படையினருடன் வந்து ராகுலின் சடலத்தை மீட்டுள்ளனர்.   ராகுலின் குடும்பத்தினர் மின்சார வாரியமும் டில்லி மாநகராட்சியும் தான் தங்கள் மகனின் மரணத்துக்கு காரணம் என சோகமாக தெரிவித்துள்ளனர்.

இது வரை  மாநகராட்சியோ , மின்சார வாரியமோ அல்லது ஸ்விக்கி நிறுவனமோ யாருமே ராகுலின் குடும்பத்துக்கு உதவவில்லை என்பதை அவர் குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்