சென்னை:

 சென்னை மடிப்பாக்கம் அருகே தனது 3 பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு பால் வாங்க கூட முடியாமல் தவிக்கும்  தவித்து வந்த சுவிக்கி ஊழியருக்கு உதவி செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கால் தொழிலாளர் வர்க்கமே கடும் பாதிப்புக்கு உள்ளானது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலோர் புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், நமது மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோரும் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதற்கு இந்த செய்தியே ஒரு எடுத்துக்காட்டு.

கொரோனா ஊரடங்கு காரணமாக சுவிக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்து வரும் பணி செய்து வந்த சரணவன் என்பவரது வேலையும் பறிபோக, தனது 3 பெண் குழந்தைகள் மற்றும் மனைவியுடன், மடிப்பாக்கம் பகுதியில் ஒரு ஒற்றை அறையில் வசித்து வந்த அவரது வாழ்க்கையும் கேள்விக்குறியானது.

குடும்ப அட்டை இல்லாததால் அரசின் உதவிகளை கூட பெற முடியாத நிலையில், பக்கத்து வீட்டின்ர் மற்றும் தன்னார்வர்களின் உதவியால் பசியாறி வந்த நிலையில், சிறு குழந்தைகளுக்கு பால் வாங்கக்கூட முடியாத நிலையில், தத்தளித்து வருகிறார்.

இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், தமிழக முதல்வர் சரவணன் குடும்பத்திற்கு உதவி செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

முதல்வரின் மனிதாபிமான செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.