ணவுபொருகள் டெலிவிரி செய்துவந்த ஸ்விக்கி நிறுவனம், தற்போது ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் மதுபானங்களையும் டெலிவர அனுமதி  பெற்று, தனது டெலிவரியை தொடங்கி உள்ளது.
இந்த டெலிவரி தமிழ்நாட்டில் என்று நினைக்க வேண்டாம் மது பிரியர்களே… தற்போது   ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஸ்விகி நிறுவனம் மதுபானங்களையும் டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது. விரைவில் தமிழகத்திற்கும் வந்துவிடும்….

கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது. ஆனால் கடந்த 1ந்தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாநிலத்தின் வருமான தேவையை கருத்தில்கொண்டு தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்கள் மது விற்பனையை தொடங்கி உள்ளன.
இதுதொடர்பான வழக்கில், மதுக்கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்வது குறித்து மாநில அரசுகள் ஆலோசித்து முடிவு செய்யுங்கள் என்று அறிவுரை கூறியது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில அரசு மதுவிற்பனையை ஆன்லைனில் தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக மாநில தலைவர் ராஞ்சியில் மட்டும் ஆன்லைன் மது விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. மதுப்பாட்டில்களை டெலிவரி செய்ய ஸ்விகி உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, டெலிவரி செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து  ஸ்விகி  நிறுவனம், நாடு முழுவதும் மதுபானங்களை டெலிவரி செய்வதற்கு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்விகி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பின் மூலம் சிறிய சிறிய பகுதிகளுக்கும் டெலிவரி செய்ய முடிகிறது. நாங்கள், உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கி பணியாற்றிவருகிறோம். அதன்மூலம், மளிகை பொருள்களையும் டெலிவரி செய்ய முடியும். மதுபானத்தை வீடு தேடிவந்து பாதுகாப்பான முறையில் டெலிவரி செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.