திருவனந்தபுரம்:

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. அங்குள்ள  பள்ளி ஒன்றில் மாநில சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், 230 பேருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்களில் ஒரு ஆசிரியர் உள்பட 6 பள்ளி மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்பட வட மாநிலங்களிலும்  இந்த காய்ச்சல் வேகமாக பரவியது. காய்ச்சல்  பாதிப்புக்கு தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆளானதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது, கேரளாவில்  மீண்டும் பரவும் பன்றிக்காய்ச்சல் பரவி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பன்றிக் காய்ச்சல்  ‘எச்1என்1 – இன்ஃப்ளுயன்சா வைரஸ்’ கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. இதன் அறிகுறியாக காய்ச்சல் வந்தவர்களுக்கு அறிகுறியாக  சளி, தொண்டை வலி, மூக்கில் நீர்வடிதல், உடல்வலி, சோர்வு போன்றவை கருதப்படுகின்றன.

இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டம் முக்கம் அருகே உள்ள  ஆனையம்குன்னு அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ  மாணவிகளுக்கு திடீரென காய்ச்சல் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்த  மாவட்ட கல்வி அதிகாரி அளித்தத் தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள VMHM மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் 230 பேருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளது தெரிய வந்தது. இவர்களில் அந்த பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்கள் உட்பட ஆசிரியர் ஒருவருக்கும் H1N1 பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எச்1என் பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடடினயாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்படுள்ளது. அந்த பகுதியில் பன்றி  காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.