தமிழகத்தில் பரவி வரும் பன்றி, டெங்கு காய்ச்சல்: 24பேர் பலியாகி இருப்பதாக ராதாகிருஷ்ணன் தகவல்

 சென்னை:

மிழகத்தில்  பன்றி, டெங்கு காய்ச்சல்கள் வெகு வேகமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக மக்கள் பீதியடைந்து வருகின்ற னர். இந்த நிலையில், பன்றி காய்ச்சல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருப்பதாகவும், டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும்  டெங்கு பன்றி காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு விதமான காய்ச்சல் பரவி வருவதால் மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், சுமார் 250க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிலர் காய்ச்சக்கு பலியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் சமீபத்தில் பலியான நிலையில், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கூறி உள்ளார். சென்னையில்  காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்,  பன்றி காய்ச்சலை பொறுத்தவரையில் கைகழுவும் பழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தாலே இந்நோயை தவிர்க்கலாம். நல்ல தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு உண்டாகிறது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.  பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தான் இவை அதிகமாக பரவுகிறது.

அதுபோல  காலை மற்றும் மாலை நேரங்களில் மனிதர்களை கடிக்கும் கருப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முழு கை உடைகளை அணிய வேண்டும்.

கர்ப்பிணிகள், முதியவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எடை அதிகம் உள்ளவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பன்றி, டெங்கு காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம். கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம்.

பன்றி காய்ச்சலுக்கு ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,. காரைக்குடியில் 2 பேரும், கோவை, ஈரோட்டில் இருவரும் அறிகுறியுடன் இறந்துள்ளனர். இத்துடன் சேர்த்து பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்து உள்ளது. சிகிச்சைக்கு தாமதமாக வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்தால் இறப்பை முற்றிலும் தவிர்க்கலாம் என்ற  ராதாகிருஷ்ணன் டெங்கு காய்ச்சலுக்கு இந்த வருடம் இதுவரையில் 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.