புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

புதுச்சேரி,

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான  மேலும் ஒருவர்  இன்று  உயிரிழந்தார். இதையடுத்து பன்றிக்காய்ச்சல் காரணமாக  இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் இதுவரை  38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று  புதுவை முருகப்பாக்கத்தை சேர்ந்த மதியழகன் (வயது 50) பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இதனால் புதுவையில் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே பன்றிக்காய்ச்சல் காரணமாக இதே  பகுதியைச் சேர்ந்த பானுமதி , பெரிய காலாப்பட்டு முருகன் மற்றும் அரியாங்குப்பத்தை சார்ந்த 39 வயதான சத்யராயணன் ஆகியோர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.