ஜெனிவா:

ந்திய அரசின் கோரிக்கையை ஏற்று பிரபல தலைமறைவு வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரிக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகளை சுவிட்சர்லாந்து அரசு முடக்கி உள்ளது.

மத்தியஅமலாக்கத்துறையின்  கோரிக்கையை ஏற்று ரூ.283.16 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று முகமாற்று அறுவை சிகிச்சை செய்து லண்டனில் வசித்து வந்தார்.

நிரவ் மோடி மீதான மோசடி  தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்த நிலையில், இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில்,  கடந்த மார்ச் 19-ந் தேதி அவரை லண்டன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமின் கோரி அவர் பலமுறை தாக்கல் செய்த மனுக்களை  வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு நிராகரித்து விட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு சொந்தமான 4   வங்கி கணக்குகளில் ஏராளமான கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.  சுமார், 6 மில்லியன் டாலர் அளவுக்கு பணம் உள்ளதாகவும்,  அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.286 கோடி பணத்தை, அந்த வங்கிக்கணக்கிற்கு சட்ட விரோதமாக நிரவ் மோடி டெபாசிட் செய்துள்ளதாகவும், இதனால், அந்த கணக்குகளை முடக்க வேண்டும் என சுவிஸ் அரசுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள்  கோரிக்கை விடுத்திருந்தனர்.

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, சுவிட்சர்லாந்த அரசு நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பெயரில் உள்ள 4 வங்கிக் கணக்குகளையும்  முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.