சுவிஸ் குடியுரிமை நிறுத்திவைக்கப்பட்ட முஸ்லிம் மாணவர்கள்

சிரியாவில் இருந்து ஸ்விஸ் நாட்டில் வாழும் முஸ்லீம் சகோதரர்கள் பெண்களுக்குக் கைகுலுக்க மறுப்பு அவர்களின் குடியுரிமை செயல்முறையை நிறுத்தி வைத்தது சுவிஸ் அரசு .


முஸ்லீம் சகோதரர்கள் தங்களது பெண் ஆசிரியர்களிடம்  கைகுலுக்க மறுத்ததால், மத சுதந்திரத்திற்காக கிளம்பிய தேசிய விவாதத்தினால் சுவிச்சர்லாந்து அரசு அந்த இரண்டு இளம் முஸ்லீம் சகோதரர்களின் குடும்பத்திற்கும் குடியுரிமை செயல்முறையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
swiss handshake muslim 2

14 மற்றும் 15 வயதுடைய சகோதரர்கள்,தெர்விலின் வடக்கு நகராட்சியுள்ள கல்வி அதிகாரிகளிடம், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பெண்களிடம் உடலளவில் தொடர்பு வத்துக் கொள்வது தங்கள் நமிபிக்கைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் “மாணவர்கள் ஆசிரியர்களுக்குக் கை குலுக்கும்” சுவிஸ் வழக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, ஆண்-பெண் பாகுபாட்டைத் தவிர்க்க பெண் ஆசிரியர்களிடம் மட்டுமல்லாது ஆண் ஆசிரியர்களிடமும் தொடர்பை தவிர்க்குமாறு அவர்கள் தெர்வில் அதிகாரிகளால் அறிவுறுத்தப்படனர்.
ஆனால் இந்த சமரசம் சட்ட அமைச்சர் சிமோனெட்டா சொம்மாருகா உட்பட முன்னனி சுவிஸ் அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தது. “கை குலுக்குவது (சுவிஸ்) கலாச்சாரத்தின் ஒரு பகுதி” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
செவ்வாயன்று, தெர்வில் அமைந்துள்ள பேசெல்-நாடு மண்டலத்தின் அதிகாரிகள், குடும்பத்தின் இயல்பான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.
பேசெல்-நாடு பேச்சாளர் அட்ரியன் பௌம்கார்ட்னர், ஒரு மின்னஞ்சலில்,  ஏ.டி.எஸ் செய்தி நிறுவனத்திடமிருந்து ஒரு அறிக்கையில் தற்காலிக நிறுத்திவைப்பை உறுதி செய்தார்.
இந்த அறிக்கையில், இது போன்ற குடியுரிமை நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுவது பொதுவானது தான் என்றும் அதிகாரிகளுக்கு பெரும்பாலாக அந்த குடும்பங்கள் பற்றி கூடுதல் தகவல் தேவைப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாசெல்லை சார்ந்த ஒரு இமாம் மற்றும் சிரிய குடிமகனான அந்த இரண்டு சிறுவர்களின் தந்தை, 2001 ல் சுவிச்சர்லாந்து குடிபெயர்ந்து அரசியல் தஞ்சமும் பெற்றிருந்தார். பாஸல் குடிபெயர்தல் அலுவலகம், தந்தையின் தஞ்சத்திற்கான கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட சூழ்நிலைகளைப் பற்றி மேலும் தகவல் சேகரிக்கின்றது.
சுவிச்சர்லாந்தின் எட்டு மில்லியன் மக்கள் தொகையில் 350,000 முஸ்லிம்களும் அடங்குவர். இதேபோன்ற முந்தைய சர்ச்சைகளில் தங்கள் மகள்கள் நீச்சல் பாடங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று முஸ்லீம் பெற்றோர்கள் கோரினர். எனினும் முழு முகத்தை மறைப்பதைத் தடை செய்ய முற்பட்டு பள்ளிகள் முஸ்லீம் குடும்பங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது முஸ்லீம்கள் வெற்றி பெற்றனர்.