சுவிஸ் ஓபன் பாட்மின்டன் – இந்தியாவின் சிந்து & ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதி!

ஜெனிவா: சுவிட்சர்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் அரையிறுதிக்கு, இந்தியாவின் சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் தகுதிபெற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் பஸல் நகரில் நடைபெறுகிறது இந்த சர்வதேச பாட்மின்டன் தொடர். இதில், பெண்கள் பிரிவு ஒற்றையர் காலிறுதியில், இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் புசனன் ஆங்பாம்ருங்பானை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியை, 21-16, 23-21 என்ற செட் கணக்கில் வென்ற சிந்து, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இதேபோன்று, ஆண்கள் பிரிவு ஒற்றையர் காலிறுதியில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், தாய்லாந்தின் கன்டபோன் வாங்சரோயனை எதிர்கொண்டார். இந்தப் போட்டியை 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.