சுவிஸ் ஓபன் பாட்மின்டன் – சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார் இந்தியாவின் சிந்து!

ஜெனிவா: சுவிஸ் ஓபன் பாட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், இந்தியாவின் சிந்து தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டார்.

இறுதிப் போட்டியில், ஸ்பெயின் நாட்டைச்  சேர்ந்த கரோலினா மரினாவிடம், 21-12, 21-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார் சிந்து. இந்தப் போட்டி வெறும் 35 நிமிடங்களே நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம், இந்த சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து 3வது முறையாக வெல்கிறார் கரோலினா. இந்தப் போட்டியில் கரோலினாவின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது.

அவர், சிந்துவுக்கு மீண்டு வரும் வாய்ப்பு எதையும் வழங்கவில்லை. தொடக்கம் முதலே மிரட்டலாக ஆடிய அவர், சிந்துவை சுதாரிக்க விடாமலேயே வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றினார்.