1000 கி.மீ. ஓடும் புதிய மின் மகிழுந்தை தயாரித்துள்ளது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த தொழில்முனைவு நிறுவனம்.

பொதுவாக மின் மகிழுந்து (மின்சார கார்)  தயார் செய்யும் நிறுவனங்களுக்கு பாட்டரிதான் எனப்படும் மின்கலம் பெரிய பிரச்னைதான்.  நாம் நாள்தோறும் பயன்படுத்தும் செல்பேசி, வாகனங்கள் உட்பட பலவற்றிலும் லித்தியம் அயன் அடிப்படையிலான மின்கலம்  பயன்படுத்தப் படுகிறது. இப்போதுள்ள மின் மகிழுந்துகளில் குறைந்த பட்ச தூர/நேரம் இயங்கும் வகையில் உள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் மின் மகிழுந்து 250 வாட்/கி.கி. ( வாட்/மணி நேரம் ஒரு கிலோவிற்கு)  அளவு பயணிக்கும். அதே சமயம்அமெரிக்கா எரிசக்தித் துறை 500 கிமீட்டர் ஓடும் மின்கலங்களை உருவாக்க நிதி உதவியும் அளித்துள்ளது.

இந்நிலையில் இன்னோலித் எனப்படும் இந்த புதிய மின்கலம் சந்தைக்கு வந்தால் மின்மகிழுந்து மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் ஒரு புதிய மாற்றம் உருவாகும்.

தற்போது டெஸ்லா நிறுவனம் பயன்படுத்தும் மின்கலம் பேனாசோனிக் நிறுவனத்தில் உருவாக்கப் பட்டது. அதே சமயம் அதிகமன விலையும் கொண்டது, அதிக பட்சம் 320 மைல்/514 கி.மீட்டர் பயணிக்கலாம், இதுதான் இப்போதைய அதிக பட்ச வேகமாக இருக்கிறது.

இந்த வேகத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மின் மகிழுந்து நிறுவனங்களும் தங்கள் மகிழுந்துகளை உற்பத்தி செய்ய நினைக்கின்றன. ஆனால் ஸ்விட்சார்ந்தில் உள்ள  இன்னொலித் எனும் புதிய தொழில்முனைவு நிறுவனம் ஒரே முறை மின்னேற்றம் செய்தால் அதிகப்பட்சம் 1000 கி.மீ ஓடும் அளவில் மின்கலத்தினை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றன.

இன்னோலித் நிறுவனத்தின் தலைவர் திரு.ஆலன் கீரின்சீல்டு , ஒரு பத்திரிக்கை்கு அளித்துள்ள பேட்டியில், இப்போது சந்தையில் உள்ள மின்கலங்களை விட எங்கள் மின்கலம் 4 மடங்கு சேமிக்கும் வசதியை கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அமெரிக்க எரிசக்தித்துறை யின் இலக்கான 500 கி.மீ தரும் மின்கலத்தை விட இரண்டு மடங்கு அதிக சேமிப்பு கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இப்போதுள்ள மின்கலத்தில்  திரவ வடிவிலான லித்தியம் அயன் மின்கலம் பயன்படுத்தப்படுகிறது. சில நிறுவனங்கள் திட லித்தியம் அயன் மின்கலங்களை பயன்படுத்துகின்றன. திரவ வடிவில் உள்ள மின்கலத்தில் திரவ நிலையில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் ஐ பயன்படுத்தி எரிசக்தியை உருவாக்குகின்றன. திடநிலையில் உள்ள மின்கலங்களில் உள்ள செல்கள் உலர்ந்த கடத்தும் பொருளைக்கொண்டுள்ளது. ஆனால் இன்னமும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை.

1000 கி.மீ ஓடும் மின்கலனை தயாரிக்கும் இன்னோலித் நிறுவன மின்கலமானது  திரவ எலக்ரோலைட் கொண்டு உருவாக்கப்பட்டாலும் அவற்றில் இயல்பாக உள்ளவற்றில் சில மாற்றங்களை செய்துள்ளோம் என தெரிவிக்கிறது. எளிதில் தீப்பற்றிக்கூடிய ற்றை நீக்கிவிட்டு நிலையான அதே சமயம் நீடித்து இயங்கும் சில பொருள்களையும், தனிமங்களையும் இணைத்துள்ளதாகவும், எளிதில் தீ பற்றாவண்ணம் இந்த மின்கலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இன்னொலித் நிறுவனம் மின்கல சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உள்ள நிலையில் அதன் தயாரிப்பு பணிகளை ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உள்ளததாகவும், அடுத்த 5 ஆண்டு களில் சந்தைக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

அதே சமயம் கிரின்ஷீல்டு மற்றும் இன்னோலித் நிறுவனத்தில் முதன்மை செயலாக்க ்திகரி செர்ஜி புசீன் இருவரும் ஏற்கனவே ஸ்விட்சர்லாந்தில் ஒரு மின்கல தயாரிப்ப நிறுவனம் ஒன்றில் முதன்மை செயலாக்க அதிகாரி மற்றும் செயல் அதிகாரியாக இருந்து 2017ல்  ஒரு திவால் மோசடியில் ஈடுபட்டது பெரிய சர்ச்சைக்குரியதாக இருந்தது.  இந்நிலையில் இவர்களின் புதிய வரவை எல்லா நிறுவனங்களும் சந்தேத்துடன் பார்க்கின்றனர்.

-செல்வமுரளி