பெற்றோர்களே எச்சரிக்கை: இன்று இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை செல்ஃபோனை அனைத்து வைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்….

சென்னை:

குழந்தைகள் தினமான இன்று, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் என்று பேரன்ட்ஸ் சர்ச்கிள் என்ற குழந்தைகள் நல அமைப்பு, பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுபோல தமிழக பள்ளிக் கல்வித்துறையும் வலியுறுத்தி உள்ளது.

குறைந்தது ஒருமணி நேரமாக செல்போனை ஆஃப் செய்துவிட்டு, குழந்தைகளுடன் குதுகலியுங்கள் என்றும், அதன்படி இன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை செல்போனை  அனைத்து வையுங்கள் என்று வலியுறுத்தி உள்ளது.

குழந்தைகள் பெற்றோர் இடையே ஒரு உறவுப்பாலத்தை அமைக்கும் பொருட்டு மீண்டும் இணைவதற்காக துண்டித்து வையுங்கள் என்ற பெயரிலான பரப்புரையை PARENT CIRCLE அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இதையொட்டி,  இன்று நேருவின் பிறந்தநாளான, குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் இன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30  மணி வரை பெற்றோர் தங்கள் செல்போன்களை அணைத்து வைக்க வேண்டும் என்றும், பின்னர் வாரத்திற்கு ஒருமுறை, நாள் ஒன்றிற்கு ஒரு முறை என கைபேசி போன்ற பொருள்களை ஒதுக்கி வைத்து குழந்தைகளோடு செலவிலும் பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் எனவும்  தமிழக பள்ளிக் கல்வித்துறையும்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை ஏற்கனவே அனுப்பி உள்ளது. அவர்கள் பள்ளிகளுக்கு இதுகுறித்த தகவலை தெரிவித்து, மாணவர்களிடம் வலியுறுத்தி  உள்ளனர்.

நவீன டிஜிட்டில் யுகத்தில், பெற்றோர்கள், மொபைல்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களையே உற்று நோக்கிக்கொண்டிருப்பதால், அவர்களின்  குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைந்து வருவதால், பல குழந்தைகள் மனஅழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதுபோல நிலையை தடுக்கும் வகையில்  பெற்றோர் சர்க்கிள் என்ற அமைப்பு குழந்தைகளுடன் நேரத்தை செலவி பெற்றோர்களுக்கு வலியுறுத்தி வருகிறது.