சுவிட்சர்லாந்து அரசாங்கம் முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது அவசரக்கால மற்றும் அத்தியாவசிய தேவைக்காக காப்பிக்கொட்டையை  சேமித்து வைத்தது

அதன் பின்னரும்  போர், இயற்கைப் பேரழிவுகள் அல்லது தொற்றுநோய்கள் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக தொடர்ந்து காபியை (காபிக்கொட்டை) முன்கூட்டியே சேமித்துவைத்து வருகிறது.
ஆனால் இந்த காபி சேமித்தலை 2022ம் ஆண்டு சுவிட்லாந்து அரசாங்கம் நிறுத்தவிரும்புகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பும் அதிகமாக உள்ளது. 15300 டன் காபி தற்போது சேமிப்பில் உள்ளதாவும் அடுத்த  மூன்று மாதங்களுக்கு இதுபோதும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது

இந்த இணைப்பில் தெரிவித்துள்ளபடி ’’ https://www.admin.ch/gov/de/start/dokumentation/medienmitteilungen.msg-id-74644.html’’ காபியில் தேவையான காபியில் கலோரிகள் ஏதும் இல்லை, எனவே ஊட்டச்சத்து கண்ணோட்டத்தில் உணவு பாதுகாப்புக்கு பங்களிக்காது என்றும் தெரிவித்துள்ளனர்

சுவிட்சர்லாந்து நாட்டில்தான் அதிகபட்சமாக  ஒரு தனி நபர் ஒருவர் சராசரியாக 9 கிலோ காபி பயன்படுத்துகிறார். ஆனால் பிரிட்டன் நாட்டில் தனிநபர் ஒருவர் சராசரி காபி பயன்பாடு மூன்றே கால் கிலோதான்

படம் : காபியின் சத்துவிபரங்கள்

-செல்வமுரளி