Random image

நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை அமைக்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு

றைந்த திரையுலக நட்சத்திரம்  நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தில் சிலை வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அவருக்கு சிலை அமைக்கப்பட இருப்பதாக சுவிஸ் அரசு  அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவரும், தமிழப்பட பட உலகில் பிரபலமாகி, இந்தி சினிமாவுக்கு சென்றவர் நடிகை ஸ்ரீதேவி. அங்கும் தனது சிறந்த நடிப்பினால்  இந்தியா முழுவதும் உள்ள  ரசிகர்களின் கனவுகன்னியாக திகழ்ந்தார். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீதேவி திடீரென மரணம் அடைந்தார்.  அவருடைய திடீர் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீதேவியை பெருமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு தேசிய விருது வழங்கியது.

ஏற்கனவே  இந்தி பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் யாஷ் சோப்ராவுக்கு சுவிட்சர்லாந்தில் அந்த நாட்டு அரசு சிலை அமைத்தது. அவரது படப்பிடிப்பு காரணமாக சுவிட்சர்லாந்து சுற்றுலா அதிகரித்தாகவும்கூறியது. இது தவிர ரெயிலுக்கும், ஏரிக்கும் அவருடைய பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவிக்கும் சுவிட்சர்லாந்தில் சிலை அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்து அரசு சார்பில் ஸ்ரீதேவியின் சிலை  பெர்ன் நகரில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தனி’ என்ற படம் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.  இந்த படத்தில் நடித்த ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு சிலை அமைத்து கவுரவப் படுத்துவதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்து உள்ளது.

இந்த தகவைலை  சுவிஸ் நாட்டின் அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார்.