50 இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்களை பெற உள்ள இந்தியா

பெர்ன்

ஸ்விட்சர்லாந்து நாட்டில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள 50 பேர் குறித்த விவரங்களை இந்திய அரசு பெற உள்ளது.

கடந்த முறை மோடி அரசு பதவி ஏற்றபோது ஸ்விஸ் வங்கிகளில் உள்ள கணக்கு குறித்த விவரங்களை விரைவில் பெற உள்ளதாக அறிவித்தது.   அதை ஒட்டி இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் இயற்றப்படன.    சுவிட்சர்லந்து வங்கிகளில் உள்ள கணக்கு விவரங்களில் சுமார் 100 பேருடைய விவரஙக்ளை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு அளித்திருந்தது.

இந்நிலையில் ஸ்விட்சர்லாந்து அரசு மேலும் 50 வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க உள்ளது.  இந்த கணக்குகள் அனைத்திலும் பல சட்ட விரோதமாக ஈட்டிய வருமானம் முதலீடு செய்யப்பட்டுள்ளன என ஸ்விஸ் அர்சு தெரிவித்துள்ளது.    இந்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்விஸ் அரசு இதை அளிக்க உள்ளது.

இந்த கணக்குகளை பல பெரிய தொழிலதிபர்கள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  அவற்றில் பல போலியானவை எனவும் சொல்லப்படுகிறது.  இந்த தொழிலதிபர்கள் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம், தொழில் நுட்பம், பெயிண்டு, ஜவுளி, வீட்டு அலங்காரம், தங்கம் மற்றும் வைர நகைகள் ஆகிய தொழில்களை செய்து வந்தனர் என அறியப்படுகிறது.

இவர்களின் வருமான விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க ஸ்விஸ் அதிகாரிகள் இந்த இந்தியர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.   அந்த நோட்டிஸுக்கான பதில் கிடைத்த உடன் அவற்றையும் இந்திய அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.