பெர்ன்: புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் உருவம் பொறித்த நாணயத்தை சுவிஸ் அரசு வெளியிடுகிறது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். அதிரடியாகவும், அனாயசமாகவும் விளையாடி 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை தன்னகத்தே வைத்திருப்பவர்.

தற்போது தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கிறார். அவரை கவுரவிக்கும் பொருட்டு, சுவிஸ் அரசு ஒரு வியத்தகு காரியத்தை செய்துள்ளது.

அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகிறது. சுவிட்சர்லாந்தில் வாழும் நபர் ஒருவருக்கு நாணயம் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

அந்த நாணயங்கள் ஜனவரி முதல் புழக்கத்துக்கு வரும். சுவிஸ் அரசின் இந்த நடவடிக்கைக்கு பெடரர் நன்றி தெரிவித்துள்ளார்.