விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு யு-டியூபில் வெளியிட்டுள்ளது. ராஜ பாண்டியாக நடிக்கும் விஜய் சேதுபதி கையில் வாளுடன் இருக்கும் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

saira

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ராயலசீமாவில் வாழ்ந்த சுந்தந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது மனைவி வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் அமிதாப்பச்சன், சுதீப், தமன்னா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 41வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, அவரது கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டரை ’சைரா நரசிம்ம ரெட்டி’ படக்குழு யு -டியூபில் வெளியிட்டுள்ளது. இதில் ராஜ பாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி பார்ப்பதற்கு ஒரு போர்வீரனை போல கையில் வாளுடன், நெற்றியில் பட்டையுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார். விஜய் சேதுபதியின் இந்த கதாபாத்திரம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

கார்ட்டூன் கேலரி